2024 இந்திய பொது தேர்தலில், தமிழக அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கி மற்றும் அதன் சதவீத விபரம்
2024 இந்தியா பொதுத் தேர்தல், தமிழ்நாட்டில் 2024 ஏப்ரல் 19 அன்று நடந்தது. இத்தேர்தல் முடிவுகள் 2024 ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி, 18 வயதிற்கு மேற்பட்ட வாக்களிக்க தகுதியுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை ±6,18,90,348 ஆகும். இதில் வாக்களித்த வாக்காளர்களின் எண்ணிக்கை 4,36,74,048 ஆகும். இது ±70.56681601 % சதவீதமாகும்.